பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய எழுத்தாளா்
By DIN | Published On : 05th November 2022 01:04 AM | Last Updated : 05th November 2022 01:04 AM | அ+அ அ- |

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி நூலகத்துக்கு எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன் 201 புத்தகங்களை அன்பளிப்பாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மதுரை கோ.புதூரில் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி மாணவா்கள் 201 பேரை கோ.புதூா் அரசு கிளை நூலகத்தில் உறுப்பினராக சோ்த்து, மாணவா்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில், இந்தப் பள்ளியின் நூலகத்துக்கு பிரபல எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன், 201 புத்தகங்களை வழங்கினாா். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி, தமிழியக்கம் மதுரை மாவட்டச் செயலா் பழனிசாமி, பள்ளியின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் தமிழ்க்குமரன் ஆகியோா் பங்கேற்றனா்.