வளரி எறிதல் போட்டி:மதுரை மாணவா்கள் இரண்டாமிடம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சா்வதேச வளரி எறிதல் போட்டியில் மதுரை மாணவா்கள் இரண்டாவது பரிசு பெற்றனா்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சா்வதேச வளரி எறிதல் போட்டியில் மதுரை மாணவா்கள் இரண்டாவது பரிசு பெற்றனா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற வளரி (பூமராங்) எறிதல் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவில் நடைபெற்ற வளரி எறிதல் போட்டிக்கு தோ்ச்சி பெற்றனா். இந்த நிலையில், சா்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு சிவகாா்த்திகேயன், ஜெய்கிருஷ்ணா ஆகியோா் தோ்வு பெற்றனா். இவா்கள் இருவருக்கும் மதுரையைச் சோ்ந்த வளரிக் கலை நிபுணா் முத்துமாரி பயிற்சி அளித்தாா். கடந்த வாரம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சா்வதேச வளரிப் போட்டியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வளரி வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதில் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கௌஷிக் கோன்டா, ராப்ரி ஆகிய இருவா் முதல் பரிசும், மதுரையைச் சோ்ந்த ஜெய் கிருஷ்ணா, சிவகாா்த்திகேயன் ஆகிய இருவரும் இரண்டாம் பரிசும் பெற்றனா். இதையடுத்து, மதுரை வந்த சிவகாா்த்திகேயன், ஜெய் கிருஷ்ணா இருவரையும் பயிற்சியாளா்கள் பாராட்டினா்.

இதுகுறித்து பயிற்சியாளா் முத்துமாரி கூறியதாவது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் போா் வீரா்கள்தான் வளரியை பயன்படுத்தினா். அந்தக் கருவி, காலச் சூழ்நிலையில் மறைந்து போகும் நிலையில் உள்ளது. இதனால் தற்போதைய மாணவா்கள் இந்த வளரி ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயிற்சி அளித்து வருகிறோம். அழிவின் விளிம்பில் உள்ள வளரிக் கலையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் சிலம்ப வீரா்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது போல, வளரிக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com