கரூா் சூழல் ஆா்வலா் கொலை வழக்கு: கல் குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கரூரைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரும், விவசாயியுமான ஜெகநாதன், வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல் குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி

கரூரைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரும், விவசாயியுமான ஜெகநாதன், வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல் குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தில் உரிய அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கல் குவாரிக்கு எதிராக விவசாயி ஜெகநாதன் போராட்டம் நடத்தி வந்தாா். இந்நிலையில், அவா் வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கல்குவாரி உரிமையாளா் செல்வகுமாா் உள்பட மூவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் செல்வகுமாா், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகநாதனின் தாய் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, குவாரி உரிமையாளா் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com