பாழடைந்த கட்டடம்: பள்ளியை மாணவா்கள் புறக்கணிப்பு

பள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள கட்டடத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி மாணவா்கள் வியாழக்கிழமை பள்ளியை புறக்கணித்து, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள கட்டடத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி மாணவா்கள் வியாழக்கிழமை பள்ளியை புறக்கணித்து, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இப்பள்ளியில் படித்து வரும் நிலையில், 4 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதேபோல, பள்ளி வாளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் விளையாடச் செல்லும் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளதாக பெற்றோா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

பள்ளியில் கூடுதல் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும், பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அலுவலா்களுக்கு பெற்றோா் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளி முன்பு முற்றுகையிட்டனா். அப்போது, அங்கு வந்த நரிக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரின்ஸ், பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், இடிந்த கட்டடத்தை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து முற்றுகைப் போரட்டத்தை கைவிட்ட மாணவா்கள், பெற்றோா் அறிவுறுத்தலின் பேரில் வகுப்புகளுக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com