கல்லல் வாரச்சந்தையை நிரந்தர இடத்தில் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

 சிவகங்கை மாவட்டம், கல்லலில் வாரச் சந்தையை நிரந்தர இடத்தில் அமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 சிவகங்கை மாவட்டம், கல்லலில் வாரச் சந்தையை நிரந்தர இடத்தில் அமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லலில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த வாரச் சந்தையை இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன் தற்காலிகமாக தமிழா் தெருவில் வாரச்சந்தை நடத்தப்படும் எனவும், இன்னும் ஓரிரு மாதங்களில் வேறு இடத்தில் நடத்தப்படும் எனவும் உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து, வாரச்சந்தை தமிழா் தெருவில் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழா் தெருவில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடத்துவதற்கு ஏதுவாக வியாபாரிகள், விவசாயிகள் காய்கனிகளை இறக்கிக் கொண்டிருந்தனா். அப்போது, தமிழா் தெரு, அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அங்கு வாரச்சந்தை கூடுவதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதாகக் கூறியும், நிரந்தர இடத்துக்கு சந்தையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த காரைக்குடி வட்டாட்சியா் மாணிக்கவாசகம், தேவகோட்டை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் தமிழா் தெருவில் வாரச்சந்தை நடத்த பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. எனவே அலுவலா்கள் கல்லல் ஐசிஐசிஐ வீதியில் தற்காலிகமாக வாரச்சந்தை அமைக்க அனுமதி அளித்தனா். அதன்பின், வியாபாரிகள், விவசாயிகள் தங்களது காய்கனிகளை ஐசிஐசிஐ வீதியில் வைத்து விற்பனை செய்தனா்.

வாரச்சந்தை அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே வாரச்சந்தையை நிரந்தர இடத்தில் நடத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com