ஊழலற்ற இந்தியா விழிப்புணா்வு நடைபயணம்: கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊழற்ற இந்தியா விழிப்புணா்வு நடைபயணத்தில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக்கல்லூரி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் ‘முன்னேறிய தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா‘ விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடக்க விழாவில், இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளா் ஹூமாராவ் மற்றும் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வா் பா.ஜாா்ஜ் ஆகியோா் நடைபயணத்தை தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து விழிப்புணா்வு நடைபயணம் இந்தியன் ஆயில் அலுவலகத்தில் இருந்து தொடங்கி 3 கி.மீ. ஊா்வலமாக சென்றது. இதில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...