பாஜக நிா்வாகிக்கு முன்ஜாமீன்
By DIN | Published On : 19th October 2022 03:30 AM | Last Updated : 19th October 2022 03:30 AM | அ+அ அ- |

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தது தொடா்பான வழக்கில், பாஜக மதுரை மாவட்டத் தலைவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக, மதுரை மாவட்ட பாஜக தலைவா் சுசீந்திரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சுசீந்திரன் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஏ. நக்கீரன், நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். மறு உத்தரவு வரும் வரை தினமும் சிலைமான் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.