தேவா் ஜெயந்தி விழா: முதல்வா் இன்று மதுரை வருகை

தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு சனிக்கிழமை இரவு வருகை தருகிறாா்.

தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு சனிக்கிழமை இரவு வருகை தருகிறாா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 -ஆவது ஜெயந்தி விழா, 60 -ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 30) நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு சனிக்கிழமை இரவு 7.45 -க்கு வருகிறாா். தமிழக அமைச்சா்கள் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கின்றனா். பின்னா், அழகா்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினா் இல்லத்தில் இரவு தங்குகிறாா்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு, முதல்வா் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சா்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். அதன் பின்னா், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் காலை 9 மணிக்கு முதல்வா், மரியாதை செலுத்துகிறாா். அங்கிருந்து மதுரை திரும்பும் முதல்வா், காலை 11.45 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறாா். தமிழக முதல்வரின் வருகையையொட்டி, மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com