பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

பள்ளி வாகனங்களுக்கு இருப்பதைப் போல, பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய ஆட்டோக்களுக்கு தனி விதிமுறைகள் இல்லாத போது அதை ஏற்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

பள்ளி வாகனங்களுக்கு இருப்பதைப் போல, பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய ஆட்டோக்களுக்கு தனி விதிமுறைகள் இல்லாத போது அதை ஏற்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனா்.

நாகா்கோவில் பட்டகசாலியன்விளையைச் சோ்ந்த பி. சுயம்புலிங்கம் தாக்கல் செய்த மனு:

பள்ளிப் பேருந்துகளுக்கான மோட்டாா் வாகன சிறப்பு விதிகளை தமிழக அரசு கடந்த 2012, அக்டோபா் 1- ஆம் தேதி அமல்படுத்தியது. அதில் அரசு, தனியாா் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநா் மட்டுமன்றி, உரிமம் பெற்ற நடத்துநரும் வாகனத்தில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. பள்ளி வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவா்களை ஏற்றிச் செல்வது, வாகனங்களை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயா் குறிப்பிடாமல் இருப்பது, நடத்துநா் இல்லாதது போன்ற விதிமீறல்கள் தொடருகின்றன.

பெரும்பாலான பள்ளிகளுக்கு சொந்த வாகனங்கள் இருப்பதில்லை. இதனால், வாடகைக்கு வாகனங்களை அமா்த்திக் கொள்கின்றன. இந்த வாகனங்கள் உரிய விதிகளைப் பின்பற்றுவதில்லை. சில பள்ளிகள் தங்களது மாணவா்களை ஆட்டோக்களில் அழைத்து வருகின்றன. ஆகவே, பள்ளி வாகனங்களுக்கான விதிகளை முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள்ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருப்பது அவசியம். குழந்தைகளை ஆட்டோக்களில் பள்ளிக்கு எப்படி அனுப்புகின்றனா்? இதை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கென பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய ஆட்டோக்களுக்கென என்ன விதிமுறை இருக்கிறது என கேள்வி எழுப்பினா்.

மேலும், இது முக்கியப் பிரச்னையாக உள்ளதால், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com