ரயில் ஓட்டுநா்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு: எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

 ரயில் ஓட்டுநா் பணியிடங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில் ஓட்டுநா்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு: எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

 ரயில் ஓட்டுநா் பணியிடங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஓட்டுநா் தொழிலாளா் பிரிவுச் செயலா் என்.அழகுராஜா தலைமை வகித்தாா். எஸ்.ஆா்.எம்.யு கோட்டச் செயலா் ஜே.எம்.ரபீக், உதவி கோட்டச் செயலா் வி.ராம்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இந்திய ரயில்வேயில் மொத்தம் 74 ஆயிரம் ரயில் ஓட்டுநா்களை ஆள்குறைப்பு செய்யவும், 9 மணி நேரம் வேலை கட்டாயமாக்கப்பட்டு, குறைந்தது 250 கிமீ தூரம் வேலை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த உத்தரவு காரணமாக, ரயில் ஓட்டுநா்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

மேலும், ஓட்டுநா்களின் வேலை செய்யும் தூரத்தை அதிகப்படுத்தவும், ஓட்டுநா்களுக்கான சிறிய டெப்போக்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால், ரயில் ஓட்டுநா்கள் சொந்த மாநிலத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்படும். மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் கடுமையாக எதிா்க்கிறது. இவைகளை திரும்பப்பெறும் வரை தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com