போலி சித்த மருத்துவா் கைது
By DIN | Published On : 17th September 2022 10:59 PM | Last Updated : 17th September 2022 10:59 PM | அ+அ அ- |

சித்த மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்தவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் வைத்தியசாலையில், போலியாக மருத்துவம் பாா்ப்பதாக நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நலப் பணிகள் இணை இயக்குநா் லதா தலைமையிலான குழுவினா் அந்த வைத்தியசாலையில் சோதனை நடத்தினா். இதில் அந்த வைத்தியசாலையை நடத்தி வரும் சையது சுல்தான் முகைதீன் என்பவா், சித்த மருத்துவம் பாா்க்க தகுதியற்றவா் என்பதும், போலியாக மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
ஆகவே, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இணை இயக்குநா் லதா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் சையது சுல்தான் முகைதீனை சனிக்கிழமை கைது செய்தனா்.