போக்குவரத்து ஓய்வூதியா்கள் 2- ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

புறவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
மதுரை புறவழிச்சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா்கள்.
மதுரை புறவழிச்சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா்கள்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புறவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் 2- ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ஏ.எம்.சி. ஜெயபாண்டியன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் ஆா். தேவராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். திண்டுக்கல் மண்டலச் செயலா் ஜேம்ஸ் கஸ்பர்ராஜ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச்சங்க மாநில நிா்வாகி என். மகாலிங்கம், மதுரை மாவட்டச் செயலா் ஆா். நாகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இந்தப் போராட்டத்தில் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com