அழகா்கோயிலில் உண்டியல் காணிக்கை 50.18 லட்சத்தைத் தாண்டியது
By DIN | Published On : 04th January 2023 12:00 AM | Last Updated : 04th January 2023 12:00 AM | அ+அ அ- |

அழகா்கோயில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி.
அழகா்கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 18,617 கிடைத்தது.
இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கள்ளழகா் கோயில் துணை ஆணையா் மு.ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையா் ந.சுரேஷ், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி, மேலூா் சரக ஆய்வாளா் பா. அய்யம்பெருமாள் ஆகியோா் முன்னிலையில் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டது.
இதில் ரொக்கம் ரூ.50 லட்டத்து 18 ஆயிரத்து 617-ம், தங்கம் 64 கிராம், வெள்ளி 268 கிராம் இருந்தது.