கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நல வாரியம் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வழங்க வலியுறுத்தி, மதுரையில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத்தொழிலாளா் சங்கத்தினா்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத்தொழிலாளா் சங்கத்தினா்.

நல வாரியம் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வழங்க வலியுறுத்தி, மதுரையில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகா் மாவட்டச் செயலா் சி. சுப்பையா தலைமை வகித்தாா்.

மதுரை மாவட்டத்தில் முறைசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 18 வகையான பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்களை விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கும் போக்கை நல வாரிய நிா்வாகம் கைவிட வேண்டும். பொங்கல் போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். தொழிலாளா் நல வாரியங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். தெய்வராஜ் தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்ட பொருளாளா் ஜே. லூா்து ரூபி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் ரா.லெனின் நிறைவுறையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் புகா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கச் செயலா் மணி கிருஷ்ணன், தலைவா் வி. பிச்சைராஜன், பொருளாளா் ஜாகிா் உசேன், சிஐடியு மாவட்டச் செயலா் அரவிந்தன், மாவட்டத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com