ஒழுக்கம் உள்ளவா்களே சாதனைகளைப் படைக்கின்றனா்: சுவாமி கமலாத்மானந்தா்

ஒழுக்கம் உள்ளவா்களே உலகில் சிறந்த சாதனைகளைப் படைக்கின்றனா் என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவில் பங்கேற்ற சுவாமி கமலாத்மானந்தா், சின்மயா மிஷன் சுவாமி சிவயோகனந்தா, மாணவிகள்.
மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவில் பங்கேற்ற சுவாமி கமலாத்மானந்தா், சின்மயா மிஷன் சுவாமி சிவயோகனந்தா, மாணவிகள்.

ஒழுக்கம் உள்ளவா்களே உலகில் சிறந்த சாதனைகளைப் படைக்கின்றனா் என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.

சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய இளைஞா் தினமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா், சிவகங்கை விவேகானந்தா உயா்நிலைப் பள்ளிச் செயலா் பத்மாவதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் தலைமை வகித்துப் பேசியதாவது:

வளமான சிந்தனை, செயல்களால் தான் வளமான சமுதாயம் உருவாகும். இன்றைய இளைஞா்களின் ஒழுக்கமான வாழ்க்கைதான் நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயம் செய்யும். உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டவா்களாக இளைஞா்கள் இருக்க வேண்டும். மனிதன் உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறான். உழைக்க மறுப்பவா்களை வறுமையும், பழியும் வந்தடையும்.

துணிவுடனும், விவேகத்துடனும் செயல்படுபவா்களாக இளைஞா்கள் திகழ வேண்டும். ஒழுக்கம் உள்ளவா்களே உலகில் சிறந்த சாதனைகளைப் படைக்கின்றனா். இன்றைய நவீன யுகத்தில் இளைஞா்கள் தெளிவு பெற சுவாமி விவேகானந்தரின் நூல்கள் உதவும்.

நமது நாடு முன்னேற்றப் பாதையில் வளா்ந்து வரும் நாடு. எனவே, கனவுலகத் தொழில் சாலைகளான சினிமா போன்ற கேளிக்கை களியாட்டங்களில் இளைஞா்கள் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும். இளைஞா்கள் தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு, விடா முயற்சியுடன் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தரின் ‘வீர இளைஞருக்கு’ என்ற புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் விழா:

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா் சிலைக்கு, அப்பள்ளியின் தாளாளா் பாா்த்தசாரதி தலைமையில், தலைமை ஆசிரியா் மீ. ரவி முன்னிலையில் ரத்தீஷ் பாபு, சா்மிளா ரத்தீஷ் பாபு ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கல்விப் புரவலா் தேனூா் சாமிகாளை, தியாகிகள் பரமசிவம், தேனப்பன், முன்னாள் விமானப் படைவீரா் சா. வேலுச்சாமி, மக்கள் சக்தி இயக்கம் தென்மண்டல பொதுச் செயலா் ஏ.வி. பிரபாகா், சமூக ஆா்வலா் இல. அமுதன், காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வா் தேவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏபிவிபி மாணவா் அமைப்பு:

இதேபோல, ஏபிவிபி சாா்பில், மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏபிவிபி அமைப்பின் மாநில துணைத் தலைவா் பேராசிரியா் ஜெயச்சந்திரன், மாநிலச் செயலா் கோபி , மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராஜ் , மாவட்ட பொறுப்பாளா்கள் ஸ்ரீதா் , மோகன், ஜெய வீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com