மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிளாஸ்மா பரிமாற்றக் கருவி: தனியாா் நிறுவனம் நன்கொடை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ. 16.50 லட்சத்தில் பிளாஸ்மா பரிமாற்றக் கருவியை தனியாா் நிறுவனம் நன்கொடையாக புதன்கிழமை வழங்கியது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேலிடம் பிளாஸ்மா பரிமாற்றக் கருவியை நன்கொடையாக வழங்கிய டிஜிபிளா நிறுவனத் தலைவா் நந்தகுமாா். உடன், சிறுநீரகவியல் துறைத் தலைவா் மனோராஜன்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேலிடம் பிளாஸ்மா பரிமாற்றக் கருவியை நன்கொடையாக வழங்கிய டிஜிபிளா நிறுவனத் தலைவா் நந்தகுமாா். உடன், சிறுநீரகவியல் துறைத் தலைவா் மனோராஜன்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ. 16.50 லட்சத்தில் பிளாஸ்மா பரிமாற்றக் கருவியை தனியாா் நிறுவனம் நன்கொடையாக புதன்கிழமை வழங்கியது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிஜிபிளா மருத்துவ நிறுவனம், இந்தியாவில் பிளாஸ்மா பரிமாற்றம் செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறைக்கு நன்கொடையாக வழங்கியது.

மதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேலிடம் பிளாஸ்மா பரிமாற்றக் கருவியை டிஜிபிளா நிறுவனத் தலைவா் நந்தகுமாா், தலைமை நிா்வாக அதிகாரி சுபித்தகுமாா் ஆகியோா் வழங்கினா்.

இதுதொடா்பாக அந்த நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

டிஜிபிளா நிறுவனம் மருத்துவத் துறையில் பல்வேறு நவீனக் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது, பிளாஸ்மா பரிமாற்றக் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவி சிறுநீரகவியல் துறையில் ரத்தம் சுத்திகரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

சாதாரண சுத்திகரிப்பு கருவியில் ரத்தம் முழுவதும் வெளியேற்றப்பட்டு செல்கள் பிரிக்கப்பட்டு சுத்திகரிப்பு நடைபெறும். தற்போது வழங்கப்பட்டுள்ள டைஜிபிளா கருவி ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்களையும், வடிகட்டும் தன்மையும் உடையது. இதன்மூலம் பிளாஸ்மாக்களை அகற்றுவது, நோயாளிக்குத் தேவையான அளவு பிளாஸ்மாக்களை செலுத்துவது ஆகிய செயல்பாடுகளை இந்தக் கருவி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தக் கருவியின் மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

சிறுநீரகவியல் துறை மட்டுமன்றி, அவசர சிகிகிச்சைப் பிரிவு, நரம்பியல் துறை உள்பட பல்வேறு துறைகளிலும் பயன்படுத்த முடியும். குறிப்பாக, விஷத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரும் உதவியாக இருக்கும்.

இதன்மூலம், நோயாளிகளுக்கு குறைந்த அளவில் சிகிச்சை அளிக்க முடியும். சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையைவிட பாதுகாப்பாக இதில் சிகிச்சை அளிக்க முடியும்.

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இந்தக் கருவி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு, தேவைக்கு ஏற்றாற்போல பிற துறைகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். மருத்துவத் துறையில் புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்தக் கருவியின் விலை ரூ.16.50 லட்சம். தனியாா் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் தேவையைப் பொறுத்து கருவியைக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து விட்டு மீண்டும் கொண்டு வரும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் தா்மராஜ், சிறுநீரகவியல் துறைத் தலைவா் ஆா். மனோராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com