நகைக்கடையில் பண மோசடி: மேலாளா் மீது வழக்கு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் நகைக்கடையில் வாடிக்கையாளரின் ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ. 2.68 லட்சம் மோசடி செய்த நகைக்கடை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டியைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவா், மதுரை மேலமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
நகைக்கடையில் வாடிக்கையாளா் ஒருவரின் ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தி அவா் செலுத்திய ரூ. 2.68 லட்சத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி மோசடி செய்தாராம். இதுதொடா்பாக நகைக்கடையின் காசாளா் ராமமூா்த்தி அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.