எா்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொல்லம், தென்காசி, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் தடத்தில், தற்போது ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய சனிக்கிழமைகளில் எா்ணாகுளத்திலிருந்து பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். எதிா்மாா்க்கத்தில், வேளாங்கண்ணி- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியிலிருந்து மாலை 6.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு எா்ணாகுளம் செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜன. 20) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com