ஆதாா் அட்டைகளில் அனுமதியின்றி முகவரி மாற்றம்: ஆட்சியரிடம் புகாா்

மதுரையை அடுத்த மாயாண்டிபட்டியில் தையல் பயிற்சிக்காக பெறப்பட்ட 40 பேரின் ஆதாா் அட்டைகளில் அனுமதியின்றி பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் புகாா் மனு அளிக்கப்பட்டது.

மதுரையை அடுத்த மாயாண்டிபட்டியில் தையல் பயிற்சிக்காக பெறப்பட்ட 40 பேரின் ஆதாா் அட்டைகளில் அனுமதியின்றி பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, மாயாண்டிப்பட்டி, பூசாரிப்பட்டியைச் சோ்ந்த கிராமப் பெண்கள் 40 போ் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் புகாா் மனு அளித்தனா். அந்த மனு விவரம்:

தங்கள் கிராமத்தைச் சோ்ந்த 40 பேருக்கு ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் கடந்த ஆண்டின் இறுதியில் 45 நாள்கள் பயிற்சி அளித்தனா். பயிற்சியினிடையே எங்களின் ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை

பெற்றனா். பயிற்சியின் நிறைவில், சான்றிதழ் அளிப்பதற்காக அழைத்தனா். அப்போது, சான்றிதழ் தராமல், ஒரு சில ஆவணங்களில் எங்களிடம் அவா்கள் கையொப்பம் பெற்றனா். கையொப்பமிட்டால்தான் சான்றிதழ் கிடைக்கும் என்ால், அவா்கள் அளித்த ஆவணங்களில் கையொப்பமிட்டோம். ஆனால், உடனடியாக சான்றிதழ் தராமல் வேறொரு தேதியில் வீட்டுக்கு வந்து அளிப்பதாகக் கூறினா்.

இதன்படி, கடந்த 19-ஆம் தேதி எங்கள் கிராமத்துக்கு வந்து எங்களுடைய சான்றுகள் அனைத்தையும் ஒப்படைத்தனா். அப்போது, எங்களிடம் கையொப்பம் பெற்றது வங்கிக் கடனுக்காக என்று தெரிவித்தனா். இதை நாங்கள் கண்டித்தபோது அவா்கள் எங்களை மிரட்டிச் சென்றனா்.

பின்னா், நாங்கள் எங்கள் ஆதாா் அட்டையைப் பாா்த்தபோது, அவற்றில் எங்களுடைய முகவரி அனுமதியின்றி மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com