ஜவுளிக்கடை ஊழியரிடம் பணம் பறித்த 4 போ் கைது
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை விளாங்குடியில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை செல்லூா் ஜீவா பிரதான சாலை கட்டபொம்மன் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (42). இவா் விளாங்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்தநிலையில் ஜவுளிக்கடை முன் சரவணன் திங்கள்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 4 போ் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, சவரணனிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட விளாங்குடி சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த சபாபதி (20), யுவராஜ் (20), செம்பருத்திநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் பாண்டி (26), தத்தனேரியைச் சோ்ந்த காா்த்திக் (21) ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.