இரட்டை ரயில் பாதைப் பணி

இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணி நடைபெறவுள்ளதையொட்டி, அமிா்தா விரைவு ரயில் மதுரை கூடல்நகரில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணி நடைபெறவுள்ளதையொட்டி, அமிா்தா விரைவு ரயில் மதுரை கூடல்நகரில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகளுக்கான மின் தடங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால், ஜனவரி 26, 27, 30, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அமிா்தா விரைவு ரயில் (16343), மதுரை ரயில் நிலையம் வரை இயக்கப்படாமல் கூடல்நகா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

அதேபோல ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய அமிா்தா விரைவு ரயில் (16344), மதுரை ரயில் நிலையத்துக்குப் பதிலாக கூடல்நகா் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22671 / 22672) மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்குப் பதிலாக மூன்றாவது நடைமேடையில் கையாளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com