பேரையூா் அருகே தீயில் சிக்கி ஆடு மேய்ப்பவா் பலி

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே தீயில் சிக்கி ஆடு மேய்ப்பவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமங்கலம் அருகே உள்ள மதியனூா் வீரப்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை (78). இவா் சொந்தமாக 50 ஆடுகளை வைத்து மேய்த்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அங்குள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலையடுத்து ஆடுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதாக கூறிச்சென்ற பிச்சை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை தேடியபோது அங்குள்ள வனப்பகுதியில் உடலில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுபற்றிய தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். இதுகுறித்து நாகையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com