மதுரைக் கல்லூரியில்
வேலைவாய்ப்பு முகாம்

மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மதுரைக் கல்லூரி வாரியச் செயலா் நடனகோபால் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெ. சுரேஷ் முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களும், 600-க்கும் அதிகமாக மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா். இதில், 160 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கான பணி நியமன ஆணைகளை பெற்றனா். இந்த முகாமில் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமச்சந்திரன், ராபா்ட், சாகுல் ஹமீது, பேராசிரியா்கள் மணிகண்டன், ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com