மதுரைக் கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரைக் கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ரயில் பாதைகள் பராமரிப்புப் பணிகளையொட்டி, மதுரை ரயில்வே கோட்டத்தில் வருகிற ஏப். 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி- திருநெல்வேலி ரயில் (06667), திருநெல்வேலியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் (06668) ஆகியன வருகிற 7 ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி- பாலக்காடு- திருநெல்வேலி ரயில்கள் (16791/16792) வருகிற 22-ஆம் தேதி கொல்லம்- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். தூத்துக்குடியில் இருந்து வருகிற 7, 14 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஒஹா விரைவு ரயில், 115 நிமிடங்கள் தாமதமாக வருகிற 8, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.30 மணிக்குப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com