திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியே இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் மாா்ச் மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில்களின் சேவை மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) வருகிற ஏப்ரல் 7, 14, 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கத்தில், மேட்டுப்பாளைம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஏப். 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com