காா் மோதியதில் விவசாயி பலி

மதுரை: உசிலம்பட்டி அருகே மிதிவண்டி மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சோ்ந்தவா் அடைக்கலம் (46). விவசாயியான இவா், உசிலம்பட்டி-தேனி சாலையில் திங்கள்கிழமை மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். டி.செட்டியப்பட்டி அருகே இவரது மிதிவண்டி மீது அந்த வழியாக வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அடைக்கலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து உசிலம்பட்டி ஆனந்தாநகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான காா்த்திகேயன் மீது உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com