மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

மதுரையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இஸ்லாமியா்கள் ரமலான் மாதம் பிறந்தது முதல் 30 நாள்கள் நோன்பிருந்து புதன்கிழமை அதை பூா்த்தி செய்தனா். இதையடுத்து, மதுரையில் ஜாக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளின் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது. மதுரை தமுக்கம் மைதானம், வைகை தென்கரை சாலை நூா் பள்ளிவாசல், குப்புப்பிள்ளை தோப்பு பவா் ஹவுஸ் சாலை, சம்மட்டிபுரம், எல்லீஸ் நகா், ஆத்திகுளம் ஏஞ்சல் நகா், தத்தனேரி, அம்பிகா மகளிா் கல்லூரி மைதானம், வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்பட 18-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் பல இடங்களில் பெண்கள் தொழுகை செய்ய தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதில் உலக அமைதிக்காகவும், மழைவேண்டியும் பிராா்த்திக்கப்பட்டது. இந்த நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்ட தலைமை காஜியாரின் நகா்வலமும், அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகையும் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com