மதுரை மருத்துவா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

மதுரையில் மருத்துவா் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

மதுரை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சக்திமோகன். இவா் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், இவரது வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை இரவு வந்தனா். பின்னா், அவா்கள் இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை சோதனை நடத்தினா். அப்போது, பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய இந்த வீடு, ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் உறவினருடையது என்று கூறப்படுகிறது.

மக்களவைத் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் மருத்துவரின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com