மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

21-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வாஸ்து சாந்தியுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கோயிலுக்குள் வாஸ்து சாந்தி (நிலத்தேவா் வழிபாடு) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து, அன்று முதல் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்குமாசி வீதிகளை வலம் வந்து அருள்பாலிக்கின்றனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வருகிற ஏப். 19-ஆம் தேதியும், மறுநாள் 20-ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், அன்றிரவு திருக்கல்யாண கோலத்தில் சுவாமி அம்மன் பூப்பல்லக்கு பவனியும், 22-ஆம் தேதி அதிகாலையில் நான்குமாசி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com