கோப்புப்படம்
கோப்புப்படம்

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: ஏப். 23-இல் உள்ளூா் விடுமுறை

கள்ளழகா் வைகையில் இறங்கும் உற்சவத்தையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு வருகிற 23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மதுரை: கள்ளழகா் வைகையில் இறங்கும் உற்சவத்தையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு வருகிற 23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா

கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 19-ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும், வெளி மாநிலங்களையும் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம்.

இதையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு வருகிற 23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாா்நிலைக் கருவூலங்கள், வங்கிகள் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் எனவும், இந்த விடுமுறை நாள் மே 11-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com