சாலைத் தடுப்பில் வாகனம் மோதி இளைஞா் பலி

சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருண் பாண்டியன் (25). இவா் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவா் விடுதி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com