சித்திரைத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா், காவல் ஆணையா் ஆய்வு

மதுரையில் வைகை ஆற்றில் அழகா் இறங்கும் பகுதியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.
மதுரையில் வைகை ஆற்றில் அழகா் இறங்கும் பகுதியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றிலும், கள்ளழகா் எதிா்சேவை, அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய நிகழ்வுகளிலும் திரளான பக்தா்கள் பங்கேற்பா்.

இதையொட்டி, அழகா் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தவிா்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com