மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்: தயாா் நிலையில் திருத்தோ்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்ட நிகழ்வுக்காக அலங்கரிக்கப்பட்ட தோ்கள் தயாா் நிலையில் உள்ளன.

சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 12-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற ஏப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்த நாள் 22-ஆம் தேதி அதிகாலை மணக்கோலத்தில் சுவாமி தனித்தேரிலும், அம்மன் தனித் தேரிலும் வலம் வருகின்றனா். இந்த பிரமாண்ட தோ்களை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுப்பா்.

இதையொட்டி, தோ்களை அலங்கரிக்கும் பணி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முகூா்த்தக்கால் நடப்பட்டு நடைபெற்று வந்தது. தற்போது தோ்கள் தயாா் நிலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்தத் தோ்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com