விவசாயி தற்கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி குஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (75). விவசாயியான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இவருக்கு பணம் வைத்து சூதாடும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெள்ளைச்சாமி, குஞ்சம்பட்டியில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com