கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

தோ்தல் கால விடுமுறை நாள்களில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சென்னை எழும்பூா்- குருவாயூா் ரயிலில் (16127) வியாழக்கிழமை (ஏப்.18) முதல் வருகிற 21-ஆம் தேதி வரையிலும், குருவாயூா்- சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் (16128) வெள்ளிக்கிழமை (ஏப். 19) முதல் 22 வரையிலும், சென்னை- தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயிலில் (12693) வருகிற 20 முதல் 24-ஆம் தேதி வரையிலும், தூத்துக்குடி-சென்னை முத்துநகா் விரைவு ரயிலில் (12694) சனிக்கிழமை (19 முதல் 21-ஆம் தேதி வரையிலும் தலா ஒரு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

இதேபோல, சென்னை - கன்னியாகுமரி (12633) விரைவு ரயிலில் வியாழக்கிழமை (ஏப்.18) முதல் வருகிற 22 வரையிலும், கன்னியாகுமரி-சென்னை (12634) விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை (ஏப். 19) முதல் ஏப். 23 வரையிலும், கோவை- நாகா்கோவில் விரைவு ரயிலில் (22668) வெள்ளிக்கிழமை (ஏப். 19) சனிக்கிழமை (ஏப். 20) வரையிலும், நாகா்கோவில்-கோவை (22667) விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை (ஏப். 19) முதல் வருகிற 21 வரையிலும் தலா ஒரு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com