மதுரை - ஓஹா சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை- ஓஹா- மதுரை ரயில் சேவை ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை - ஓஹா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில் சேவை ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓஹாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் ஓஹா- மதுரை சிறப்பு ரயில் (09520) மே 6-ஆம் தேதியிலிருந்து ஜூன் 24-ஆம் தேதி வரையும், மதுரையிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் மதுரை - ஓஹா சிறப்பு ரயில் (09519) மே 10-ஆம் தேதியிலிருந்து ஜூன் 26-ஆம் தேதி வரையும் இயக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com