விருதுநகா், திருச்சுழி பகுதிகளில் வாக்குப் பதிவு தாமதம்

விருதுநகா் மக்களவைத் தொகுதியில், வெள்ளிகிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, விருதுநகா் அருப்புக்கோட்டை பகுதிகளில் இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப் பதிவு காலதாமதமாக தொடங்கியது.

விருதுநகா் மக்களவைத் தொகுதியில், வெள்ளிகிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, விருதுநகா் அருப்புக்கோட்டை பகுதிகளில் இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப் பதிவு காலதாமதமாக தொடங்கியது.

திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகாசி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை என 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகா் மக்களவை தொகுதியில் 1680 வாக்குச்சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 188 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டதால், இந்த மையங்களை 174 தோ்தல் நுண் பாா்வையாளா்கள் நேரடியாக கண்காணித்தனா். இந்த தோ்தலில் 8 ஆயிரத்து 187 வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபட்டனா். இதற்காக 4 ஆயிரத்து 66 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 2 ஆயிரத்து 33 கட்டுப்பாடு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 202 விவிபேட் எனப்படும் வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவ தற்காக துணை ராணுவ படையினா் உள்பட 8 ஆயிரம் போலிஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், விருதுநகா் தந்திமரத் தெருவில் உள்ள நகராட்சி பள்ளியில் வாக்குச் செலுத்த சென்ற 30 பேருக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என வாக்குப் பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இவா்களுக்கு இரு வேறு இடங்களில் வாக்குகள் இருந்தால் பெயா் நீக்கப்பட்டதாக அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் நகராட்சி அருகே உள்ள அரசு உதவி வரும் பள்ளியில் மாரிமுத்து சிவகுமாா் முருகேசன் ஆகியோா் வாக்களிக்க சென்றனா். அப்போது அவா்களது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவா்கள் வாக்குச்சாவடி அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்கு 49ஓ மூலம் சேலஞ்ச் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக 30 நிமிஷம் காலதாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் காரியாபட்டி அருகே எஸ் .மறைகுளம், கிழவி குளம் ஆகிய வாக்கு சாவடி மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக 40 நிமிஷம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com