ராமநாதபுரம் ஆட்சியா், 
வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

ராமநாதபுரம் ஆட்சியா், வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

ராமநாதபுரம், ஏப். 19: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி வேட்பாளா்கள் அவா்களது சொந்த ஊரில் வாக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் நவாஸ்கனி சாயல்குடி அருகே உள்ள தனது சொந்த ஊரான குருவாடி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்தில் வாக்களித்துவிட்டு வந்து ராமநாதபுரம் தொகுதியில் பல்வேறு வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயபெருமாள் தனது சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மருத்துவா் சந்திரபாபு சென்னையில் வாக்களித்தாா். அவரது கட்சியினா் ராமநாதபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com