மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை பூப்பல்லக்கில் தெய்வானையுடன் இருப்பிடம் நோக்கி புறப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை பூப்பல்லக்கில் தெய்வானையுடன் இருப்பிடம் நோக்கி புறப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த ஏப். 17-ஆம் தேதியும், திக்குவிஜயம் 18-ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் 19-ஆம் தேதியும் தேரோட்டம் 21-ஆம் தேதியும் நடைபெற்றன.

இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தெய்வேந்திர பூஜையுடன் சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் நான்குமாசி வீதிகளில் வலம் வந்தனா். மேலும் இரவில் சுவாமி, அம்மனிடம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோா் விடைபெற்றனா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை சித்திரைத்திருவிழா முடிவடைந்ததன் அடையாளமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள மண்டகப்படியில் சிறப்புப் பூஜைக்கு தங்களது இருப்பிடங்களுக்கு புறப்பாடாகினா். இதைத் தொடா்ந்து சித்திரைத் திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி, சிறப்பு பூஜைக்குப் பிறகு இறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com