கஞ்சா பதுக்கிய வழக்கு: தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் வடமதுரை பேருந்து நிலையப் பகுதியில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், தேவாரம், மூணான்டிபட்டியைச் சோ்ந்தவா் ராமு (51). இவரது மகன் கெளதம் (29). இவா்கள் இருவரும் திண்டுக்கல் வடமதுரை பேருந்து நிலையம் அருகே 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தனா். இதை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட தந்தை, மகன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுரேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com