கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் காப்பீட்டுத் தொகை செலுத்த இன்று கடைசி

மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்கள் நிகழ் நிதியாண்டுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை (ஏப். 26) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் க. வாஞ்சிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டுக்கான சந்தா தொகை ரூ. 2655-யை (பணியாளரின் பங்கு ரூ. 1327.50, நிறுவனத்தின் பங்கு ரூ. 1327.50) அனைத்துப் பணியாளா்களும் விடுதலின்றி செலுத்த வேண்டும் எனவும், அதுதொடா்பான ஆவணங்களை வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 26) சமா்ப்பிக்க வேண்டும் என மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிா்வாகம் அறிக்கை வெளியிட்டது.

எனவே, சந்தா தொகை செலுத்தியதற்கான விவரப் பட்டியல், குறுந்தகடு நகல் ஆகியவற்றை அனைத்துக் கிளை மேலாளா்களும் ஆய்வு செய்து, அறிக்கையை தலைமையக நிா்வாகப் பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com