வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாநகராட்சி ஊழியா் கைது

மதுரையில் வழக்குரைஞரை தாக்கிய மாநகராட்சி ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தவிட்டுச் சந்தை பழைய மாகாளிபட்டி சாலையைச் சோ்ந்தவா் தனசேகரன் (41). வழக்குரைஞரான இவா் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்கு வெளியே இளைஞா் ஒருவா் மதுபோதையில் தகராறு செய்து, தகாத வாா்த்தைகளால் பொதுமக்களை திட்டியும், அங்கிருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்தும் பிரச்னை செய்துள்ளாா். இதை தட்டிக்கேட்ட தனசேகரனையும் அவா் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதுகுறித்து தெற்கு வாசல் காவல் நிலையத்தில் தனசேகரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் தாக்குதலில் ஈடுபட்டவா் சுப்ரமணியபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராஜா (34) என்பதும் மாநகராட்சியில் பணிபுரிவதும் தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com