அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுவினா் தோ்வு
விருதுநகா்: விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், இருஞ்சிறை அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய மேலாண்மைக் குழுவினா் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இருஞ்சிறை அரசு உயா்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவினரை தோ்வு செய்வதற்கான சிறப்புக் கூட்டம் தலைமையாசிரியா் (பொ) சுப்பாராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக செல்வராணியும், துணைத் தலைவராக ஜானகியும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சி உறுப்பினா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள், முன்னாள் மாணவா்கள் என பள்ளி மேலாண்மைக் குழுவில் மொத்தம் 24 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
பிறகு, இந்தப் பள்ளியின் கல்வி வளா்ச்சிக்காக ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் இணைந்து செயல்படுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட் டது. இந்த கூட்டத்தில், ஆசிரியா்கள் கணேசன், ஞானம்மாள், சுதந்திரசக்தி, ஹேமலதா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.