மதுரை
அரசு மருத்துவனையில் கோட்டாட்சியா் ஆய்வு
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி ஆய்வு மேற்கொண்டாா்.
மதுரை: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவின் பேரில், மருத்துவா்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவா் தனசேகரனுடன் அவா் இந்த ஆலோசனையை மேற்கொண்டாா்.
பிறகு, மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், வட்டாட்சியா் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் தமிழ் எழிலன், காவல் ஆய்வாளா் ராதா மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.