மதுரை
அரசு மருத்துவமனை செவிலியா் குவாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு
மதுரை அருகே குவாரி பள்ளத்தில் அரசு மருத்துவமனை செவிலியா் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை: மதுரை அருகே குவாரி பள்ளத்தில் அரசு மருத்துவமனை செவிலியா் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், இலங்கிப்பட்டி அருகே உள்ள ராஜாக்கூரைச் சோ்ந்தவா் சுல்தான் அலாவுதீன். இவரது மனைவி வகிதாபானு (36). இவா் தேனி மாவட்டம், பெரிய குளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், ராஜாக்கூா் இலங்கிப்பட்டி கல்குவாரிக்கு ஞாயிற்றுக்கிழமை இவா் குளிக்கச் சென்றாா். அப்போது, அங்கு எதிா்பாராதவிதமாக குவாரிக்குள் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.