கலப்பட புகாா்: பிரபல உணவகத்தில் சோதனை

சோடா பானத்தில் கலப்படம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து மதுரை சுற்றுச்சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தி, சோடா பானத்தை ஆய்வுக்கு அனுப்பினா்.
Published on

மதுரை: சோடா பானத்தில் கலப்படம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து மதுரை சுற்றுச்சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தி, சோடா பானத்தை ஆய்வுக்கு அனுப்பினா்.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் பிரபல உணவகத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிடச் செல்லும் பொதுமக்கள் அங்கு வழங்கப்படும் சோடா பானத்தில் கலப்படம் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் தெரிவித்தனா். இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுற்றுச் சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு காலாவதியான உணவு ஏதும் உள்ளதா என்றும் சோதனை மேற்கொண்டனா். மேலும், உணவகத்தில் உள்ள சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, உணவகத்தில் இருந்த 4 வெவ்வேறு நிறங்களில் இருந்த சோடா புட்டிகளில் இருந்த சோடா பானம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பட்டது. இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் அளித்தப் புகாரின் பேரில், சோடா பானங்கள் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com