காணாமல் போன கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.17.97 லட்சம் மதிப்பிலான 115 கைப்பேசிகள் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மதுரை ஊரகக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.17.97 லட்சம் மதிப்பிலான 115 கைப்பேசிகள் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மதுரை ஊரகக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் டோங்க்ரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் வழங்கப்பட்டன.

பின்னா், காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

மதுரை ஊரகக் காவல் துறையில் இதுவரை ரூ.1.93 கோடி மதிப்பிலான 1,322 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், வங்கிகளிலிருந்து பேசுவதாகக் கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று பணத்தைத் திருடிய வழக்குகளில், கடந்த 4 மாதங்களில் ரூ. 11.80 லட்சம் உரியவா்களின் வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்பட்டது.

வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்றும் மோசடி நபா்களிடம் பொதுமக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும். மேலும், வங்கி ஏடிஎம் ரகசிய எண், வங்கிக் கணக்கு எண், சி.வி.வி. எண், ஓ.டி.பி. எண் போன்ற விவரங்களை முன்பின் அறிமுகம் இல்லாதவா்களிடம் தெரிவிக்கக் கூடாது. பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இணையதள செயலிகளை நம்பியும், இணையதள வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் இணையதள கடன் செயலிகளிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். தெரியாத நபா்களிடம் இருந்து வரும் விடியோ அழைப்புகளை எடுக்கக் கூடாது.

வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட் செய்யுமாறு கைப்பேசிகளில் வரும் இணைப்புகளுக்குள் செல்லக் கூடாது. இதுபோன்ற நூதன மோசடியால் யாரேனும் பணம் இழக்க நோ்ந்தால், உதவி மையத்தை 1930 என்ற இலவச எண்ணிலும்,  இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com