பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை புதுராமநாதபுரம் சாலை தமிழன் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் சிக்கந்தா் பாட்சா (28). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், அண்மையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், அவருக்கு புதன்கிழமை மீண்டும் தலைவலி ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com