மதுரை துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், உதவி ஆணையா்கள் பணியிடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், மாநகரக் காவல் உதவி ஆணையா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், மாநகரக் காவல் உதவி ஆணையா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மக்களவைத் தோ்தல் வரவுள்ளதை அடுத்து, காவல் துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, மதுரை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் கல்பனா, மதுரை சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை சமயநல்லூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், திருநெல்வேலிக்கும், மதுரை மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் இளவரசன், விருதுநகா் நில அபகரிப்பு தனிப்பிரிவுக்கும், மதுரை திருமங்கலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் வசந்தகுமாா், நீலகிரி மாவட்டம், கூடலூருக்கும், மதுரை தெற்குவாசல் உதவி ஆணையா் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் பிரிவுக்கும், மதுரை சிபிசிஐடி, எஸ்ஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோதினி, மதுரை மத்தியக் குற்றப் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை மத்தியக் குற்றப் பிரிவு நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையா் ரமேஷ், ராமநாதபுரம் மது விலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், மதுரை உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் நல்லு, பெரியகுளத்துக்கும், மதுரை மாவட்ட குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகராஜன், ராஜபாளையத்துக்கும், மதுரை குற்ற ஆவணப் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையா் ரமேஷ், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவுக்கும், மதுரை தல்லாகுளம் உதவி ஆணையா் சம்பத், திருச்சி பொன்மலைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com