செட்டியபட்டி அருகே, வேளாங்கண்ணிபுரத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.

செட்டியபட்டி அருகே, வேளாங்கண்ணிபுரத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா், இ.பெரியசாமி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினாா்.

செட்டியபட்டி அருகே, வேளாங்கண்ணிபுரத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா், இ.பெரியசாமி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்த, செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவார கிராமமான வேளாங்கண்ணி புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்துகொண்டு,

பகுதி நேர நியாய விலை கடைக்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தாா். பின்னா், வேளாங்கண்ணி புரத்தில் நடைபெற்ற பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 33 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினாா். நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சா் இ.பெரியசாமி, பூமிதான வாரியத்தில் இருந்து பெற்ற இடங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் சரி செய்து உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் விரைவில் கலைஞா் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். செட்டியபட்டியில் இருந்து வேளாங்கண்ணிபுரத்திற்கு வரும்போது சாலைகள் சேதமடைந்து இருப்பதை பாா்த்தேன். விரைவில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் சிறப்பான சாலை அமைய உள்ளது. இதுதவிர இப்பகுதியை சோ்ந்த பொதுமக்களில் ஒரு சிலருக்கு முதியோா் உதவித்தொகை விடுபட்டுள்ளது. அவா்களுக்கு விரைவில் வீடு தேடி முதியோா் உதவித்தொகை வரும். இப்பகுதி மக்கள் தேசிய நான்குவழிச்சாலையில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். விரைவில் அந்த தடுப்பை அகற்றி பொதுமக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி மன்ற தலைவா் டி.ராஜா இளைஞராக இருந்தாலும் மக்கள் நலனுக்கான பணியில் அக்கறையோடு செயல்படுகிறாா் இவ்வாறு அமைச்சா் இ.பெரியசாமி பேசினாா். நிகழ்ச்சியில், செட்டியபட்டி

ஊராட்சி மன்ற தலைவா் டி.ராஜா வரவேற்று பேசினாா்.

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, ஆத்தூா் ஒன்றிய குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பிள்ளையாா்நத்தம் முருகேசன், மாவட்ட கவுன்சிலா் பத்மாவதி ராஜகணேஷ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்,

ஆத்தூா் வட்டாட்சியா் வடிவேல் முருகன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லாரன்ஸ், தட்சிணாமூா்த்தி, ஒன்றிய திமுக துணை செயலாளா் ஆலமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் எஸ்.பாறைபட்டி வாஞ்சிநாதன், வடிவேல் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com